Map Graph

தளிக்கோட்டை மகாதேவர் கோயில்

கேரளத்தின், கோட்டையம் மாவட்டதில் உள்ள சிவன் கோயில்

தளிக்கோட்டை மகாதேவர் கோயில் என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், கோட்டயம் மாவட்டத்தில் கோட்டயம் - குமரகம் சாலையில் மீனாசிலாற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பழங்கால சிவன் கோயிலாகும். இந்த மகாதேவர் கோயிலானது தெக்கூர் அரச குடும்பத்தாரின் அதிகாரப்பூர்வ வழிபாட்டுக் கோயில்களில் ஒன்றாகும். நாட்டார் கதைகளின்படி, பரசுராமர் இந்த சிவனை பிரதிட்டை செய்துள்ளார். இந்த கோயில் கேரளத்தில் உள்ள 108 சிவன் கோயில்களின் ஒன்று ஆகும். 108 சிவன் கோயில் சோத்ரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு தளி கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

Read article